விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விபரங்கள் மற்றும் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும் மற்றும் புகார் தெரிவிக்கவும், விழுப்புரம் கலெக்டர் அலுவலக (தேர்தல்) பிரிவு, கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்க 1800 425 7820 மற்றும் 1800 425 1740 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.