விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் யாரும், வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகளில் நேற்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது.இதற்கான பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.