அரசு பஸ் மோதி 3 பேர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
அரசு பஸ் மோதி 3 பேர் பலி
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 

கடலுார்:இருவேறு விபத்துக்களில், அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற மூவர் பரிதாபமாக இறந்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சி.தண்டேஸ்வரநல்லுாரைச் சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் அசோக்குமார், 40. அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பத்திநாதன் மகன் சந்தியாகு, 38; கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஊழியர். நண்பர்களான இருவரும் நேற்று பைக்கில் புதுச்சேரியில் இருந்து கடலுார் வழியாக சிதம்பரம் திரும்பினர்.பைக்கை சந்தியாகு ஓட்டினார்.

கடலுார், முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு பஸ் நிறுத்தம் அருகில் மாலை 4:30 மணிக்கு சென்ற போது, எதிரில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக கடலுார் நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கடலுார் துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புளிச்சகாடு பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன். 46; மின் வாரிய தற்காலிக ஊழியரான இவர், நேற்று முன்தினம் மாலை பைக்கில் சீர்காழி நோக்கி வந்தார்.விழுந்திடசமுத்திரம் கிராமத்தில் எதிரே வந்த அரசு பஸ் மோதி படுகாயமடைந்த கதிரவன், சீர்காழி அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை இறந்தார். சீர்காழி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X