விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு காமாட்சி அம்மன் சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, மகா சங்கல்பம், நவக்கிரக ேஹாமம் நடந்தது.
தொடர்ந்து, 24ம் தேதி காலை 7:00 மணிக்கு பவன பாவனம், யாகசாலை பிரதிஷ்டை, வேதபாராயணம், முதல்கால யாகம் மற்றும் 25ம் தேதி இரண்டாம் கால யாகம், பூர்ணாஹூதி, வேத சமர்ப்பணம், மூன்றாவது கால யாகம், தீபாராதனை நடந்தது.இதையடுத்து, 26ம் தேதி நான்காவது கால யாகம், ஐந்தாம் கால யாகம் நடந்தது. நேற்று 27ம் தேதி காலை 8:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேமும், 9:45 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.