நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக கடமையாற்றுவோர் 2.93 லட்சம் பேர் ... 3 நகராட்சி, 7 பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கைக்கு 36 மேஜைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2022
01:22விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3,49,014 மக்கள் தொகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2,93,186 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கைக்கு 36 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லுார், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லுார், வளவனுார், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் மொத்தம் 210 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.விழுப்புரம்42 வார்டுகளில் 1,41,162 மக்கள் தொகையில், 61,764 ஆண் மற்றும் 65,343 பெண், 25 இதர என 1,27,132 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 53 ஆண், 53 பெண் மற்றும் 23 இரு பாலர்களுக்கும் என 129 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 14 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 620 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 28 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம்33 வார்டுகளில் 72,796 மக்கள் தொகையில், 27,990 ஆண் மற்றும் 30,441 பெண், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என 58,433 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 29 ஆண், 29 பெண் மற்றும் 8 இரு பாலர்களுக்கும் என 66 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 10 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 320 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 20 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோட்டக்குப்பம்27 வார்டுகளில் 31,726 மக்கள் தொகையில், 11,581 ஆண் மற்றும் 12,090 பெண், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என 23,673 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 1 ஆண், 1 பெண் மற்றும் 26 இரு பாலர்களுக்கும் என 28 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 136 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனந்தபுரம் பேரூராட்சி15 வார்டுகளில் 6,892 மக்கள் தொகையில், 2,654 ஆண் மற்றும் 2,726 பெண் என 5,380 வாக்காளர்கள் உள்ளனர்.

15 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஒரு ஓட்டு எண்ணிக்கை மேஜை, ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 72 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 2 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரகண்டநல்லுார்12 வார்டுகளில் 5,713 மக்கள் தொகையில், 2,347 ஆண் மற்றும் 2,424 பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என 4,772 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 12 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஓட்டு எண்ணிக்கை மேஜை, ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 60 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 2 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.செஞ்சி18 வார்டுகளில் 27,045 மக்கள் தொகையில், 11,325 ஆண் மற்றும் 12,191 பெண், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என 23,536 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 14 ஆண், 14 பெண் மற்றும் 4 இரு பாலர்களுக்கும் என 32 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 156 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 4 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம்18 வார்டுகளில் 25,290 மக்கள் தொகையில், 8,579 ஆண் மற்றும் 9,359 பெண், 1 மூன்றாம் பாலினத்தவர் என 17,939 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 2 ஆண், 2 பெண் மற்றும் 16 இரு பாலர்களுக்கும் என 20 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 96 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 4 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருவெண்ணெய்நல்லுார்15 வார்டுகளில் 9,623 மக்கள் தொகையில், 4,040 ஆண் மற்றும் 4,105 பெண் என 8,145 வாக்காளர்கள் உள்ளனர். 15 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், ஒரு மண்டலமாக பிரித்து, ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 72 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 4 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வளவனுார்15 வார்டுகளில் 16,745 மக்கள் தொகையில், 7,030 ஆண் மற்றும் 7,452 பெண், 3 மூன்றாம் பாலினத்தவர் என 14,485 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, தலா ஒரு ஆண், பெண் மற்றும் 14 இரு பாலர்களுக்கும் என 16 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், ஒரு மண்டலமாக பிரித்து, ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 80 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 4 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.விக்கிரவாண்டி15 வார்டுகளில் 12,022 மக்கள் தொகையில், 4,712 ஆண் மற்றும் 4,978 பெண், 1 மூன்றாம் பாலினத்தவர் என 9,691 வாக்காளர்கள் உள்ளனர்.

இங்கு, 15 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், ஒரு மண்டலமாக பிரித்து, ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 72 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 4 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவிகளுக்கு 3,49,014 மக்கள் தொகையில், 1,42,022 ஆண், 1,51,109 பெண், 55 இதர என மொத்தம் 2,93,186 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.

இதற்காக, தலா 100 ஆண், பெண் மற்றும் இரு பாலருக்கும் 148 என 348 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 28 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 36 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள் அமைத்தும், தேர்தல் பணியில் மொத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 10 பேரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 26 பேரும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1,684 பேரும், ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் 72 பேரும் ஈடுபடவுள்ளனர்.


-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X