இல்லம் தேடிக் கல்வி திட்ட பயிற்சி முகாம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
இல்லம் தேடிக் கல்வி திட்ட பயிற்சி முகாம்
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 

மயிலம் : மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.



தமிழாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா, வட்டார கல்வி அலுவலர் கோவர்தனன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.வட்டார வளமைய கருத்தாளர்கள் அருள்குமரன், ரமேஷ், திரிபுரசுந்தரி, தாமோதரன் செந்தமிழ்ச்செல்வன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவக்குமார், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X