தி.மு.க., பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தி.மு.க., பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 

விழுப்புரம்:காங்., கட்சிக்கு வார்டு ஒதுக்கப்பட்டதால், விரக்தியடைந்த விழுப்புரம் தி.மு.க., பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம், பானாம்பட்டைச் சேர்ந்தவர் பால்ராஜ், 45; கோலியனுார் முன்னாள் தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். இவர், விழுப்புரம் நகராட்சி 42வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட ஆயத்தமாகியிருந்தார்.அந்த வார்டு நேற்று தி.மு.க., கூட்டணியில் காங்.,கிற்கு ஒதுக்கப்பட்டது. விரக்தியடைந்த பால்ராஜ், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை 6:30 மணியளவில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அங்கிருந்த தி.மு.க., நிர்வாகிகள், பால்ராஜை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X