அவிநாசி:தேர்தல் நடத்தை விதிப்படி அவிநாசி பேரூராட்சி பகுதியில், அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி, அமலுக்கு வந்துள்ள நிலையில், அவிநாசி பேரூராட்சி பகுதியில் சுவரில் இருந்த அரசியல் கட்சிகள் சார்பில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த சுவரொட்டி, பேனர்கள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்களின் பெயர் தாங்கிய கல்வெட்டில் இருந்து, அவர்களது பெயர்கள் மறைக்கப்பட்டன.