சிறுத்தை சிக்கிய திக்... திக்... வினாடிகள்: மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

29 ஜன
2022
07:44
பதிவு செய்த நாள்
ஜன 29,2022 04:32

அவிநாசி;''அந்த வினாடிப்பொழுதில் மயக்க ஊசியை செலுத்தியிருக்காவிட்டால், சிறுத்தையை பிடித்திருப்பது கடினமாக காரியமாகியிருக்கும்'' என்று, இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் கூறினார்.அவிநாசி சுற்றுவட்டார கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, திருப்பூர் அம்மாபாளையத்தில்,புதர்மண்டிய பகுதியில் நேற்றுமுன்தினம் சிக்கியது.அம்மாபாளையம் பகுதியில் உள்ள புதர்மண்டிய கட்டடத்தின் ஓரத்தில் சிறுத்தை உலவுகிறது என்ற தகவல் கிடைத்ததும், அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வனத்துறையினர் கொண்டு வந்தனர்.

புதர்மண்டிய இடத்தில் சிறுத்தையை அடையாளம் காண, அகழ்வு இயந்திர வாகனம் பயன்படுத்தப்பட்டது.மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, உதவி வன பாதுகாவலர்கள் கிருஷ்ணசாமி, கணேஷ் ராம் உள்ளிட்டோரின் மேற்பார்வையில், அகழ்வு இயந்திர வாகனத்தின் முகப்பில் அமர்ந்தபடி, வன கால்நடை மருத்துவர் விஜயராகவன், இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன், ஒரு வன ஊழியர் உட்பட, மூவர் மட்டும் பதுங்கியுள்ள இடத்தை நெருங்கினர்.'மெய் சிலிர்க்க' வைக்கும் அந்த அனுபவத்தை 'தினமலர்' நாளிதழுக்காக, இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் பகிர்ந்தவை:அடர்ந்த குடியிருப்பு நிறைந்த பகுதியில் சிறுத்தை புகுந்து, பல வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

சிறுத்தை பதுங்கியிருந்த இடத்தை நெருங்க அகழ்வு இயந்திர வாகனம் மட்டுமே, உகந்ததாக இருந்தது.அதில் இருந்தபடி குச்சியால், புதரை கிளறிபடியே சிறுத்தையை தேடினோம். வெறும், 10 அடி தொலைவில் சிறுத்தை அமர்ந்திருந்தது. எங்கள் மீது பாய்ந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கியது.ஒரு கட்டத்தில், பாய்ந்து விடுவது போன்று, அதன் செயல்பாடு மாறியது; வாகனத்தின் உள்ளிருந்த வன ஊழியர் சத்தம் எழுப்பியதால், பயந்து, பணிந்தது போல் மாறியது.

இந்த இடைப்பட்ட நேரத்தில், கால்நடை மருத்துவர் விஜயராகவன், தனது அனுபவத்தின் பயனாக, மிகச்சரியாக சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தினார். அப்போதும், முழுதாக மயங்க வில்லை. இரண்டாவது ஊசி செலுத்திய பின், மயங்கியது.இவையனைத்தும் வினாடி பொழுதில் நடந்தது. இதற்கிடையில், பொதுமக்கள் பலரும், சிறுத்தை இடம் மாறி சென்று விட்டது என்றெல்லாம் குழப்பினர். இதையெல்லாம் கடந்து, சிறுத்தையை மீட்டது, ஆகச்சிறந்த பணியாக உணர்கிறோம். இந்த இடத்தை விட்டிருந்தால், சிறுத்தையை பிடிப்பது மிக கடினமான காரியமாக மாறியிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X