சாத்துார்--சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சி உட்பட்ட புதுப்பாளையத்தில் ரோடு, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். புதுப்பாளையம் வைப்பாற்றின் தென் கரைப்பகுதியில் அமைந்துள்ள இங்கு நாளுக்கு நாள் புதிய கட்டடங்கள் உருவாக நகர் விரிவடைந்து வருகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்படும் நிலையில் முறையான ரோடு, சாக்கடை வசதி இல்லை .சிறிய மழை பெய்தாலும் ரோடு சகதியாக மாறி விடுகிறது. மழை நீர் செல்லும் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மழை தண்ணீர் செல்ல வழியின்றி காலியாக உள்ள வீட்டு மனைகளில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.தெருவிளக்குகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. குடிநீர் உப்பு சுவையுடன் காணப்படுவதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை இப்பகுதி மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.