ராஜபாளையம்- விருதுநகர் மாவட்டத்தில் மழை பொழிவு இருந்தும் கால்வாய்களில் புதர் மண்டி நீர் வெளியேற வாய்ப்பின்றி உள்ளதால் ,விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் நிலங்களை தரிசாக விடும் நிலைக்கு ஆளாகின்றனர். மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மலையால் மழையின்போது சங்கிலி தொடர் மூலம் நீர் பகிர்மானம் நடைபெறுகிறது. இதற்கு வரத்து கால்வாய்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. இவற்றை ஆதாரமாக கொண்டு பல தலைமுறைகளாக விவசாய பணிகள் தொடர்கிறது.ஆனால் இதில் பல்வேறு நீர்வரத்து கால்வாய்கள் முறையாக துார்வாராதது, வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் சுருக்கம், சீமை கருவேல மரங்கள் ஆதிக்கம் போன்ற இடர்களால் மழை பெய்து நீர்வரத்து இருந்தும் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் பெற முடிவதில்லை.இதனால் கடைமடை விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.......................முன் வரலாமேராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொழிவு ஏற்பட்டதும் சங்கிலி தொடரால் நரிக்குளம் கண்மாய் நிறைந்து விவசாயம் செழித்தது. நாளடைவில் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு,புதர்களால் ஏற்படும் தடை, கால்வாய்கள் பராமரிப்பின்றி சிதைவதால் மழை நீர் வராத நிலையில் விவசாயத்தை ஆதாரமாக நம்பி இருந்தவர்கள் நிலங்களை தரிசாக விடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை சீராக்க பொதுப்பணித் துறையினரும், கண்மாய் பாதுகாப்பு சங்கங்களும் முன் வர வேண்டும்.மாரிமுத்து, விவசாயி, நரிக்குளம்.............