ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரு இடங்களில் 80 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் காட்டூரணியில் கேணிக்கரை எஸ்.ஐ., கார்மேகம்தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பதிவு எண் இல்லாமல் வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்த போது 20 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.வாகனத்தை பறிமுதல் செய்து புகையிலை பொருட்களை கொண்டு வந்த கேணிக்கரை வசந்த நகர் தவுபிகான் 43, பரமக்குடி அக்ரஹார தெரு ராமஜெயம் 59, இருவரை கைது செய்தனர்.இதே போல், ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட போது திருமண மகால் அருகே வந்த காரில் இருந்த 60 கிலோ புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் பாரதிநகர் ஜெகன் 38, ராமேஸ்வரம் மேலத்தெரு சரவணன் 39, வெங்கட்ராமன் 50, மூவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய டிரைவர் செந்திலை தேடி வருகின்றனர்.