பரமக்குடி-பரமக்குடி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சசிகலா, 29. இவர் பரமக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை பணிமுடிந்து ஓட்டப்பாலம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வேகமாக வந்த நபர் அவரது கைப்பையை திருடி தப்பினார். தொடர்ந்து அருகில் இருந்த சி.சி.டி.வி., ல் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ராமநாதபுரம் காரி கூட்டம் பகுதியை சேர்ந்த செய்யது அலியை, 32, போலீசார் கைது செய்து, ரூ. 6,000 மதிப்புள்ள அலைபேசியை கைப்பற்றினர்.