பார்த்திபனுார்-பரமக்குடி அருகே பார்த்திபனுார் கீழத் தெருவை சேர்ந்தவர் செந்தில் ராணி, 47. சமையல் வேலை பார்த்து வரும் இவர் தனது இரண்டு மகன்களுடன் நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்த போது வீட்டை திறக்க முடியாததால் அருகிலிருந்தவர்கள் உதவிட கதவை உடைத்து திறந்துள்ளார். அப்போது பின் பக்க கதவு திறந்து வீட்டிற்குள் புகுந்த நபர்கள் பிளாஸ்டிக் வாளியில் வைத்திருந்த 32 கிராம் தங்க நகை மற்றும் இரண்டு கொலுசுகளை திருடியது தெரிந்தது. ரூ. 62 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது குறித்து, பார்த்திபனுார் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.