பரமக்குடி-பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சி நெசவாளர் காலனியில் பஸ் ஸ்டாப் உடைந்து வீணாகி வருகிறது.இந்த ஊராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் பகுதியில் சிவாஜி, சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட நெசவாளர் குடியிருப்புகள் உள்ளன. மேலும் தனியார் பாலிடெக்னிக், மகளிர் கல்லூரி, பள்ளிகள் இயங்குகிறது.பரமக்குடி, பொதுவக்குடி ரோட்டோரம் சோமநாதபுரம் பஸ் ஸ்டாப் உள்ளது. பஸ் ஸ்டாப்பின் கூரை இடிந்துள்ளது.பஸ் ஸ்டாப்பை ஒட்டி ஊராட்சி சார்பில் குப்பை தொட்டிகளை வைத்துள்ளதால் சுகாதாரக் கேடான சூழ்நிலை நிலவுகிறது.நெசவாளர்கள் தொழிலுக்கு தேவையான நுால் மற்றும் நெய்த சேலைகளை கொண்டு செல்லும்போது நிற்க இடமின்றி தவிக்கின்றனர்.சோமநாதபுரம் சவுராஷ்டிரா சபை சார்பில் பஸ் ஸ்டாப்பில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி போர்டு வைத்துள்ளனர். பஸ் ஸ்டாப் நிலை குறித்து ஊராட்சி தலைவரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என்கின்றனர்.ஒன்றிய நிர்வாகம் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.