கடலாடி--ஆப்பனுாரில் பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மரகதநாதன் தலைமை வகித்தார்.கடலாடி தாசில்தார் சேகர் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் சாந்தி, ஆப்பனுார் ஆர்.ஐ., கண்ணன், சர்வேயர் முனியசாமி, பூமிநாதன், வி.ஏ.ஓ., தாமஸ் பாக்கியம், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்.ஐ., அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.