ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை மட்டுமே பெற்று சென்ற நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.அரசியல் கட்சியினர் கூட்டணி கட்சிகளுடனும், கட்சி நிர்வாகிகளிடமும், வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து, மாவட்ட அளவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதுடன், கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாகவும், முதல் நாளில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.