ராமநாதபுரம்--ராமநாதபுரம் நகரில் தேர்தல் நடத்தை விதிகளின்படி, பொது இடங்களில்இருந்த அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், சுவெராட்டிகள், பிளக்ஸ்பேனர்களை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்., 19 ல் நடைபெறஉள்ளது. இதனையடுத்து ஜன., 26 மாலை முதல் தேர்தல்நடத்தைவிதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து நகராட்சிதேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரா உத்தரவுப்படி, ராமநாதபுரம் நகரில்அரசு தாலுகா, மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், கீழக்கரை பாலம் ஆகியபகுதிகளில் சுவர்விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. சுவர்விளம்பரம், சுவரொட்டிகள் வைக்க முன்அனுமதிபெற வேண்டும், அவ்வாறு இல்லாமல் விளம்பரம் செய்தால் தேர்தல் விதிகளின்படிநடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.நகராட்சிஅலுவலகத்தில் முதல்வர் படம் அதேசமயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தி.மு.க., முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்கள் அகற்றப்படாமல் உள்ளது. பிறகட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விதிகளின்படி இவற்றையும் அகற்ற தேர்தல் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.------