ராமநாதபுரம்--ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், 17 வார்டுகள் பெண்கள் போட்டியிட உள்ளனர்.வரும் பிப்., 19 ல் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜன., 28 முதல் பிப்., 2 வரை வேட்பு மனுதாக்கல் நடக்கிறது. ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 1 முதல் 4,7, 11, 14, 17,19, 22, 23,25, 27,29, 32,33 ஆகியவை 16 வார்டுகள் மகளிர் (பொது), 26 (எஸ்.சி., மகளிர்) மற்றும் 5,7 முதல் 10 வரை, 12, 13,15,16, 18,20, 21,24, 30, 31 ஆகிய 15 பொதுவிற்கும், 28 (எஸ்.டி.,பொது), என ஒதுக்கப்பட்டுள்ளன.----