உடுமலை:உடுமலை வழியாக கூடுதல் இயக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கொரோனா பரவல் அதிகரித்ததால், பாலக்காடு, கோவை, திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. தொற்று குறைந்தவுடன், பாலக்காடு - சென்னை, மதுரை - திருவனந்தபுரம், மதுரை-கோவை, பாலக்காடு- திருச்செந்துார் ரயில்கள் மட்டும் இயக்கப்படுகினறன.இந்த ரயில்கள் பயணிகளுக்கு போதுமான அளவில் இல்லை. நீண்ட துாரம் செல்பவர்களுக்கு கோவை- ராமேஸ்வரம், கோவை - துாத்துக்குடி ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக க வேண்டும் என, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.