சிவகங்கை-14 வது ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க கோரி அரசு போக்குவரத்துகழக தொழிலாளர்கள் கிளை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கையில் சி.ஐ.டி.யு., கிளைத்தலைவர் ஜான்பீட்டர், செயலாளர் சமயதுரை, ஒய்வு பெற்றதொழிலாளர்கள் நல அமைப்பின் தலைவர் ஆத்மநாதன், பொருளாளர் தர்மராஜ், செயலாளர் முத்துக்கிருஷ்ணன் பங்கேற்றனர்.தேவகோட்டை: சி.ஐ.டி.யு., மத்திய சங்க பொருளாளர் ஏ.தியாகராஜன், கிளை செயலாளர் ராமநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் கேசவன், ஐ.என்.டி.யு.சி., சுபாஸ்சந்திரபோஸ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.காரைக்குடி: கிளைத்தலைவர் எம்.நாகராஜன், மண்டல பொது செயலாளர் தெய்வீரபாண்டியன்,ஏ.ஐ.டி.யு.சி., மண்டல செயலாளர் முருகேசன், ஐ.என்.டி.யு.சி., மண்டல பொது செயலாளர் சுப்பிரமணியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மற்ற துறைகள் போல் மருத்துவக்காப்பீடு அட்டை வழங்க வேண்டும். 76 மாத கால டி.ஏ., உயர்வு வழங்கவேண்டும் உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.