ஆனைமலை:கம்பாலபட்டி அருகே, தென்னை நார் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து முற்றிலுமாக சேதமடைந்தது.ஆனைமலை, கம்பாலபட்டி வடக்கு வீதி அருகே நேற்று மாலை, தென்னை நார் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிவதாக, பொள்ளாச்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த லாரியில் தண்ணீர் அடித்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீயை அணைப்பதற்குள் லாரி முழுவதும் சேதமடைந்தது. தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்ததில், தென்னை நார் பாரம், மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து, ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.