சிங்கம்புணரி-சிங்கம்புணரி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 18 பேர் காயமடைந்தனர்.வேளாங்கன்னியில் இருந்து அரசு பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது. பேருந்தை டிரைவர் திருவேல்முருகன் ஓட்டினார். நேற்று காலை 10:00 மணிக்கு சிங்கம்புணரி எஸ்.செவல்பட்டிவிலக்கு அருகே வந்த போது குறுக்கே வந்த டூவீலரில் மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்பியபோது நிலைதடுமாறி பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் 18 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.