சிங்கம்புணரி-புழுதிபட்டி வழியாகச் சென்ற தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்சென்னையில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் சிவகங்கை ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது. இந்த ஊர்தி மக்களின் பார்வைக்காக நேற்று மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவகங்கை மாவட்ட எல்லையான புழுதிபட்டியில் அதிகாரிகள் சார்பில் ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அலங்கார ஊர்தி முன்பாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.