மானாமதுரை-மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று மாலை 4:30 மணிக்கு மதுரை -ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை வழிவிடு முருகன் கோயில் அருகே பறக்கும் படை தாசில்தார் மகாதேவன்,சிறப்பு எஸ்.ஐ.,அருள்ராஜ் தலைமையிலான போலீசார் சோதனை செய்த போது ராமநாதபுரத்தில் இருந்து காரில் மதுரை சென்ற ஆர்.எஸ் மங்கலத்தைச் சேர்ந்த ரகமத்துல்லா மகன் ரூகுல்ஹக் 38, என்பவரிடம் சோதனை செய்த போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 8ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து மானாமதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.