சிவகங்கை-சிவகங்கை நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வார்டு வாரியாக இவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.,19 ல் ஒரே கட்டமாக நடக்கிறது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டு, காரைக்குடியில் 36 வார்டுகளில் கவுன்சிலர் பதவியை கைப்பற்ற சர்வ கட்சியின் நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.ஜன.,28 முதல் அந்தந்த நகராட்சிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெறுகின்றனர். பார்வையாளராக சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் உள்ளார். சிவகங்கை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக கமிஷனர் பாலசுப்பிரமணியம் உள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வார்டு 1 முதல் 9 வரை பொறியாளர் எஸ்.பாண்டீஸ்வரி, வார்டு 10 முதல் 18 வரை மேலாளர் பி.ராஜேஸ்வரன், வார்டு 19 முதல் 27 வரை நகரமைப்பு ஆய்வாளர் எம்.திலகவதி ஆகியோர் உள்ளனர். முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று 74 பேர் வேட்பு மனு வாங்கி சென்றுள்ளனர்.