திருப்புவனம் -திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோக்களால் பஸ்சில் ஏற முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்புவனம் கோட்டை பஸ் ஸ்டாப்பில் ஷேர் ஆட்டோக்களால் பயணிகள் பஸ் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து போலீசார் பேரிகார்டு அமைத்து பஸ்கள் அனைத்தும் பேரிகார்டினுள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். பேரி கார்டினுள் ஆட்டோக்கள் நிறுத்தவும் தடை விதித்திருந்தனர். ஆனால் ஷேர் ஆட்டோ ஒட்டுனர்கள் பலரும் பேரி கார்டினுள் ஆட்டோக்களை இடையூறாக நிறுத்துவதால் மீண்டும் பஸ்கள் அனைத்தும் ரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. எனவே ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.