சிவகங்கை-'நீட்' -ல் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் நேற்றைய கவுன்சிலிங்கில் அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்தனர்.இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்தவர்கள் தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீடு படி 'நீட்' தேர்வினை எழுதினர். சிவகங்கையில் இருந்து 39 பேர் தேர்ச்சி பெற்றனர். நேற்று நடந்த கவுன்சிலிங்கில் ஏரியூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஆர்.சபானா, 720 க்கு 277 மதிப்பெண் எடுத்ததில் கோயம்புத்துார் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தார். அதே போன்று மானாமதுரை அரசு மேல்நிலை பள்ளி மாணவி எஸ்.திவ்யா 276 மதிப்பெண்கள் எடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி, சிவகங்கை அருகே மாங்குடி அரசு மேல்நிலை பள்ளி மாணவி எஸ்.கே., சினேகா 199 மதிப்பெண்கள் எடுத்து கிருஷ்ணகிரி புனித பீட்டர்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தார்.