ஊட்டி:நீலகிரியில், நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.நீலகிரியில், 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளில், 294 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 15 தேர்தல் அலுவலர்கள், 23 உதவி தேர்தல் அலுவலர்கள் உட்பட, 1,964 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். ஓட்டு சாவடி அலுவலர்களுக்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் வேட்பு மனுதாக்கல் துவங்கியது.19ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. 22ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மார்ச், 2ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நடக்கிறது. மார்ச், 4ம் தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது. அதில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்ந்தேடுக்கப்படுகின்றனர்.ஊட்டி நகராட்சியில், 1 முதல் 9 வார்டு, 10 முதல் 18 வார்டு, 19 முதல் 27 வார்டு, 28 முதல் 36 வார்டுக்கு நான்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்கள் நகராட்சி அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். முதல் நாளான நேற்று, மாவட்டத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.நேற்று மாலை, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்( பொ) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.கட்டுப்பாட்டு அறை திறப்புகலெக்டர் (பொ) கீர்த்தி பிரியதர்ஷனி, கூறுகையில்,''தேர்தல் நடவடிக்கைகளின் போது தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 0423--2441822, 0423--2444821 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.