திண்டுக்கல்-திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் மகள் பரமேஸ்வரி 14. இவர் 8 ம் வகுப்பு படித்தார். இவர் தோழிகளுடன் சேர்ந்து நேற்று ஒடுக்கம் பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி அருகே குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.