கோவை:கோவையில் நேற்று, 3,472 பேர் கொரோனா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 3,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3 லட்சத்து 6 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது. ஒருவர் இறந்தார். பலி எண்ணிக்கை, 2,558 ஆக உயர்ந்துள்ளது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 3,472 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 76 ஆயிரத்து 5 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 27 ஆயிரத்து 460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.