அன்னுார்:கோவை அருகே பட்டப்பகலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம், அன்னுார் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன், 20. சிட்பண்ட்ஸ் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் பட்டப் பகலில், அன்னூர் அருகே மைல்கல்லில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து, பிள்ளையப்பம்பாளையம் தமிழ்ச்செல்வன், 26. குரும்பபாளையம் ராஜராஜன், 22 ஆகிய இருவர், அன்னூர் போலீசில் சரணடைந்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அன்னுாரைச் சேர்ந்த ராஜேந்திரன்,40, பொகலூர் ரங்கநாதன், 33, ஆகிய இருவரையும் அன்னுார் போலீசார் கைது செய்தனர்.