உடுமலை:உடுமலை அருகே, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.உடுமலை, சீனிவாசா வீதியில், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இங்கு, நேற்று இரவு பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து, திடீர் தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியது.பிரதான ரோட்டில், கடைகள் மற்றும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்தனர்.