சென்னை:முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய, மாதம்தோறும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடக்கும். இக்கூட்டம், பிப்., 1ம்தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், பிப்., 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அடுத்த கூட்டம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், மார்ச் 1ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட் டரங்கில் நடத்தப்படும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.