சென்னை:உள்ளாட்சி தேர்தல் காரணமாக, அண்ணா பல்கலையின் சில தேர்வுகள் நடக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்., 19 நடக்கிறது. இந்த நாளில் 'ஆன்லைன்' தேர்வு நடந்தாலும், வினாத்தாள் அனுப்புவது, விடைத்தாளை பெறுவது உள்ளிட்ட நிர்வாக பணிகளை, கல்லுாரிகள் மேற்கொள்ள இயலாது.இதனால், அண்ணா பல்கலையின் ஆன்லைன் செமஸ்டர் தேதியில், சில பாடங்களுக்கு மட்டும் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் பிப்.,19ல் நடத்த திட்டமிடப்பட்ட தேர்வுகள், வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிய கால அட்டவணை பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறைஇதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக, பிப்., 18, 19ல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதி வரை இந்த விடுமுறையை நீட்டிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் பின்னர் வெளியாகும்.