அலங்காநல்லுார்-அலங்காநல்லுார் ஒன்றியம் அ.கோவில்பட்டி ஊராட்சி இடையபட்டியில் மழைக்கு ஒழுகும் கான்கிரீட் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.ஒருங்கிணைந்த குழைந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் இம்மையம் கட்டப்பட்டது. கடந்த 2013ல் பராமரிப்பு பணிகள் நடந்தன. இங்கு 20 குழந்தைகள் உள்ளனர். மழைக்கு ஒழுகுவதால் கட்டடம் அதிக ஈரப்பதமாகிறது. மையத்தை பராமரித்து, குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி செய்துதர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.