சோழவந்தான்---வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள சாக்கடை பாலம் ஓராண்டிற்கு முன் சேதமடைய துவங்கியது. தற்போது 'மெகா' ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுவதுடன், இரவில் விபத்து ஏற்படுகிறது. சிறுவர்கள் விழுந்து காயமடைந்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி : புதிய பாலம் கட்ட ரூ.1.5 லட்சம் ஒதுக்கி ஆறு மாதமாகிறது. அதிகாரிகள் மெத்தனத்தால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது,என்றார்.