மதுரை-தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மதுரை உற்பத்தி திறன் குழு சார்பில் அரசின் 'ஜெம்' போர்ட்டலில் வணிகம் செய்வது குறித்த டிஜிட்டல் கருத்தரங்கு நடந்தது. குழுத் தலைவர் ராஜேந்திர பாபு வரவேற்றார். இணையதளம் வாயிலாக நிறுவனத்தை பதிவு செய்வது, மத்திய, மாநில அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்பது குறித்து தமிழகம், புதுச்சேரி ஜெம் பயிற்றுனர் ரமேஷ் மகாதேவன் பேசினார். குழு செயலர் ஜெகன் மோகன் நன்றி கூறினார்.