வாடிப்பட்டி-வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 16 விவசாயிகளின் 32 ஆயிரத்து 425 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.காய் ஒன்று ரூ.7.20 முதல் ரூ.9.43 வரை விலை போனது. இதில் 18 வியாபாரிகள் பங்கேற்றனர். ஏலம் மூலம் ரூ.2.52 லட்சம் பெறப்பட்டு விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. எட்டு விவசாயிகளின் 283 கிலோ கொப்பரை கிலோ ரூ.88க்கு விலை போனது. இதன் மூலம் பெறப்பட்ட ரூ.22 ஆயிரத்து 010 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.