மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2022
13:50

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் கார் சர்வீஸ் சென்டரில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இச்சம்பவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



புதுச்சேரி, வாழைக்குளம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்து மகன் பாலாஜி, 19; கருவடிக்குப்பம் கிழக்கு கடற்சாலையில் உள்ள தனியார் கார் ரிப்பேர் மற்றும் டிங்கரின் சென்டரில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு, கார் ஒன்றை பாலாஜி வாட்டர் வாஷ் செய்துள்ளார். அப்போது, தண்ணீர் பம்பு மோட்டாரை நிறுத்தியபோது மின்சாரம் தாக்கி, பாலாஜி துாக்கி வீசப்பட்டுள்ளார். சுயநினைவு இன்றி கிடந்த அவரை உடன் பணியாற்றும் ஊழியர்கள் கருவடிக்குப்பம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு ஆவேசமடைந்த பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கார் டிங்கரிங் கம்பெனி நடத்திய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த பாலாஜி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர். இதனால், நேற்று இரவு லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாக இருந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X