மணி ஓசை எழுப்பி காங்., ஆர்ப்பாட்டம்
வாரச்சந்தையை சீரமைக்க தீர்மானம்வீரபாண்டி: சேலம் ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து முதல் கூட்டம், தலைவர் முருகபிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் குணாளன், துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஞாயிறு வாரச்சந்தை மற்றும் ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டு ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் சீரமைத்து மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீரோடையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்புஆத்துார்: ஆத்துார் அருகே, பழனியாபுரி கிராமத்தில், நீரோடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து நேற்று, ஆத்துார் தாசில்தார் மாணிக்கம் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். நீரோடை பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்த இருவரிடம், இரண்டு ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
ஏற்காட்டில் பூத்துக் குலுங்கும் காபி பூஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள காபி தோட்டங்களில் காபி செடிகளில் பூ பூக்கத் தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் காபி விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் செய்யப்பட்டு வரும் காபி செடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பது வழக்கம். தற்பொழுது இங்கு உள்ள காபி செடிகளில் பூ பூக்க தொடங்கி உள்ளது. பூ பூக்க தொடங்கியதால் காபி தோட்டம் முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் காபி பூக்களை கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.
'சைரன்' இல்லாத காரில் டி.ஜி.பி.,ஆத்துார்: தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று, மதியம், 3:10 மணியளவில், சென்னையில் இருந்து, தலைவாசல் சுங்கச்சாவடி வழியாக சேலம் சென்றார். அப்போது, 'ஹூண்டாய்' கறுப்பு நிற காரில் டி.ஜி.பி., சென்றபோதும், அந்த காரில், 'சைரன்' எதுவும் பொருத்தப்படவில்லை. தவிர, அந்த காருக்கு பின்னால் வேறு எந்த பாதுகாப்பு வாகனமும் வரவில்லை. சுங்கச்சாவடியில் இருந்து, ஆத்துார் டி.எஸ்.பி.,யின் 'பொலிரோ' கார் மட்டுமே சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டீசல் இருப்பு இல்லாததால் பங்க் மூடல்ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார், விநாயகபுரம், துலுக்கனுார், சம்பேரி உள்ளிட்ட பகுதி களில் ரிலையன்ஸ், நயரா பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில், நேற்று, டீசல், பெட்ரோல் இருப்பு இல்லை என, அறிவிப்பு பலகை வைத்து பங்குகளை மூடினர்.இதுகுறித்து, தனியார் பெட்ரோல் பங்க் டீலர்கள் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பின், பங்கிற்கு குறைவான அளவுகளில் பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டது. தற்போது, டீலர்களுக்கு, பெட்ரோல், டீசல் அனுப்பாததால், பங்குகளில் இருப்பு இல்லை. பங்க் முன் இருப்பு இல்லை என, அறிவிப்பு பலகை வைத்து, தடுப்புகள் அமைத்து மூடி வைத்துள்ளோம்' என்றனர்.
நியமன குழு உறுப்பினர் தேர்வுமகுடஞ்சாவடி: இடங்கணசாலை நகராட்சியில் நியமன குழு உறுப்பினராக, பா.ம.க.,வை சேர்ந்த மாதேஸ், ஒப்பந்த குழு உறுப்பினராக, தி.மு.க.,வை சேர்ந்த இந்திராணி மற்றும் வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக, தி.மு.க.,வை சேர்ந்த சிவக்குமார், நாகராஜன், விஜயலட்சுமி, ரூபிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.