கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், மூன்று பாலங்கள் கட்டும் பணி முடிவடையும் நிலையில், மேலும் புதிதாக மூன்று பாலங்கள் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைவில் பணிகளைத் துவக்கவுள்ளது.கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும், தற்போது பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
திருச்சி நோக்கிய ரோட்டில் 200 மீட்டர் துாரத்துக்கும், கோவை நோக்கிய ரோட்டில் 175 மீட்டர் துாரத்துக்கும் அணுகுசாலை உருவாக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு பொருத்துவது, சர்வீஸ் ரோடு, வர்ணம் பூசுவது என அனைத்துப் பணிகளும் முடிவடைந்து திறப்பு விழாவுக்காக இந்த பாலம் தயாராக உள்ளது.கவுண்டம்பாளையம் பாலம்தேசிய நெடுஞ்சாலையின் தொடர்ச்சியாகவுள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில், ரூ.66 கோடி மதிப்பில், கவுண்டம்பாளையத்தில் ஹவுசிங் யூனிட் அருகில் துவங்கி, 1205 மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்துடன்'சென்டர் மீடியன்' உடன் கூடிய நான்கு வழிப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 28 தாங்கு துாண்கள் உள்ளன.
இந்த பாலத்திலும் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே திறந்து விடப்பட்டுள்ளது. முறையான திறப்பு விழாவுக்கு இன்னும் நாள் குறிக்கப்படவில்லை.இவ்விரு பாலங்களும் ஒரே நாளில் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, இதே தேசிய நெடுஞ்சாலையில் இந்த பாலத்துக்கு அருகில் துடியலுாரில் கட்டப்பட்டு வரும் பாலத்திலும் 70 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டதாக, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்னும் வருகிறதுமூன்று பாலங்கள் தயாராகவுள்ள நிலையில்,அடுத்ததாக கோவையில் மூன்று முக்கிய சந்திப்புகளில் பாலங்கள் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை தயாராகவுள்ளது.
சரவணம்பட்டியில் ரூ.80 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பில், காளப்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து துடியலுார் ரோடு சந்திப்பு வரையிலுமாக 1.4 கி.மீ., நீளத்துக்கும்,சிங்காநல்லுாரில் ரூ.141 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு பாலா மருத்துவமனை அருகில் துவங்கி, சாந்தி பெட்ரோல் பங்க் வரையிலுமாக 2.4 கி.மீ., நீளத்துக்கும், சாய்பாபா காலனி சந்திப்பில் ரூ.59 கோடியே 93 லட்சத்துக்கு 1.14 கி.மீ., நீளத்துக்கும், மொத்தம் மூன்று பாலங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் டெண்டர் இறுதி செய்யப்படவுள்ளது.இந்த மூன்று பாலங்களிலும், ஒரு அடி நிலம் கூட கையகப்படுத்த வேண்டிய தேவையில்லை என்பதால், ஜூனில் 'ஒர்க் ஆர்டர்' கொடுத்து, ஜூலையிலேயே பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மூன்று பாலங்களும் கட்டப்பட்டால், கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும் என்பதுடன், தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் புதுப்பொலிவு பெறுமென்பதும் நிச்சயம்.-நமது நிருபர்-