ஈரோட்டில் போக்குவரத்து பாதிப்பை தடுக்க கேபிள் ஒயரை 'சுமந்த' மாணவர்கள்; பாராட்டி பரிசளித்த டி.எஸ்.பி.,
Added : மே 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஈரோடு:ஈரோட்டில், கழன்று விழுந்த கேபிள் ஒயரால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது. ஆனால், மூன்று பள்ளி சிறுவர்கள், ஒயரை துாக்கிப்பிடித்து, போக்குவத்து பாதிப்பை தவிர்த்தனர். அவர்களை அழைத்து டி.எஸ்.பி., பாராட்டினார். ஈரோடு, கொல்லம்பாளையம், ரயில்வே நுழைவு பாலத்தில், மேற்புறம் கட்டப்பட்டிருந்த கேபிள் ஒயர், கம்பத்தில் நேற்று காலை, 8:15 மணியளவில் கழன்று விழுந்தது. இதனால் கரூர் மார்க்கமாக கன ரக வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று அணிவகுத்து சென்றன.

கொல்லம்பாளையம் பீமன் தோட்டத்தை சேர்ந்த கோபிநாத், 14, அவரது சகோதரர் தமிழரசன், 11, அதே பகுதியை சேர்ந்த சண்முக ராஜா, 13, ஆகியோர், ௮:௨௫ மணியளவில் அவ்வழியே வந்தனர். ஒரு லாரி கேபிள் ஒயரில் சிக்கி செல்ல முடியாமல் நிற்பதையும், அதனால்தான் போக்குவத்து பாதிப்பதையும் உணர்ந்தனர். இந்நிலையில் லாரியில் ஏறிய ஒரு சிறுவன், ஒயரை துாக்கி விட்டு இறக்கினார். பின்னர் வாகனங்கள் செல்ல உதவி செய்யும் விதமாக, மூவரும் ஒயரை துாக்கி பிடித்தபடி நின்றனர். இதனால் டூவீலர்கள், ஆட்டோ, கார், பஸ், லாரி என வாகனங்கள் சீராக செல்லத் தொடங்கின. சிறுவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஒயரை பிடித்தபடி நின்றதை, வாகன ஓட்டிகள் யாரும் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை.
அதே சமயம் தகவலறிந்த சூரம்பட்டி போலீசார், போக்குவரத்து போலீசார் சென்றனர். ஒயரை துண்டித்து அகற்றினர். இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பை தடுத்த, ஒரு மணி நேரமாக ஒயரை துாக்கிப்பிடித்தபடி நின்ற சிறுவர்கள், ஈரோடு சி.எஸ்.ஐ., பள்ளி மற்றும் கொல்லம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பது தெரிந்தது. மூவரையும் அலுவலகத்துக்கு வரவழைத்த டி.எஸ்.பி., ஆனந்தகுமார் பாராட்டி பரிசளித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X