இக்கோயிலை சேர்ந்த ஒரு சமூகத்தினர் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கொழுக்கட்டை படைக்க வேண்டும். இக்கொழுக்கட்டையை ஆவியில் வேக வைக்காமல் பனை ஓலையில் கட்டி வைத்து தீயில் சுட்டு வேக வைப்பர். ஒரு கொழுக்கட்டைக்கு 750 கிராம் அரிசி மாவு, 450 கிராம் சர்க்கரை, ஒரு தேங்காய், மட்டிப்பழம், தலா பத்து கிராம் ஏலக்காய், சுக்கு பயன்படுத்துவர். நேற்று முன்தினம் இரவு தீயில் சுட்டு வேகவைக்கப்பட்ட கொழுக்கட்டைகள் நேற்று காலை நாகரம்மனுக்கு படைக்கப்பட்டது.