நாகர்கோவில்:கவர்னர் ரவி மிகவும் ஆபத்தானவர், அரசியல்வாதி போல பேசுகிறார்,'' என, நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: நீர்நிலை ஆக்கிரமிப்பு நீண்ட காலமாக இருக்கும் பிரச்னை. பெரும்பாலான அரசு கட்டடங்கள் நீர்நிலைகளில் தான் அமைந்துள்ளன. ஆனால் மக்களை மட்டும் குப்பைகளை போல் அள்ளி வெளியே போடுவது வேதனை அளிக்கிறது.
பிற நாடுகளின் உதவியுடன் ஆயுத படைகளை கொண்டு தமிழின போராட்டத்தை நசுக்கியவர் ராஜபக்சே.பன்முகத்தன்மைக்கு எதிரான செயல்பாடுதான் இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு காரணம். இந்தியாவிலும் தற்போது பா.ஜ., ஒரே நாடு, ஒரே மதம் என்ற திட்டத்துடன் செல்கிறார்கள். இதனால் இலங்கை போன்ற நிலை இந்தியாவில் ஏற்படும்.உதவி செய்வது போல் இலங்கையில் இந்தியா தலையிடுவதை அங்குள்ள சிங்களர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் போல் கவர்னர் விமர்சிக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவை சங்பரிவார் துருப்பு சீட்டாக பயன்படுத்துகின்றனர்.நிதி நெருக்கடி இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.