நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மையமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இரண்டாயிரம் வள்ளம், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை.குறும்பனை கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற பைபர் படகு கவிழ்ந்து, ஏசுதாசன், 51, என்ற மீனவர் பலியானார். ஒருவர் நீச்சலடித்து கரை சேர்ந்தார்.