சாலை விபத்தில்பொறியாளர் பலி | சென்னை செய்திகள் | Dinamalar
சாலை விபத்தில்பொறியாளர் பலி
Added : மே 15, 2022 | |
Advertisement
 

அசோக் நகர், :இருசக்கர வாகன விபத்தில் மென்பொருள் பொறியாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, கீழ்ப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மகன் விஷ்ணு, 25; மென்பொருள் பொறியாளர். இவரது நண்பர் அயனாவரத்தைச் சேர்ந்த இஜாஸ் அகமது, 23.நேற்று அதிகாலை, நண்பர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அசோக் பில்லர் நோக்கி சென்றனர். 'உதயம்' தியேட்டர் சந்திப்பு அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற ஆட்டோவை மகா விஷ்ணு முந்தி செல்ல முயன்றார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், வேகத்தடை மீது ஏறியதில் நிலை தடுமாறி அருகில் இருந்த 'பேரிகார்ட்' மீது மோதியது.இதில், நண்பர்கள் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் இஜாஸ் அகமது பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X