பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா கடந்த, 13ம் தேதி, 16 வகையான அபிேஷகம், அலங்கார பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து, மகா சுதர்சன ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, ஏழு வகையான ேஹாமங்கள், திரவியாஹுதி, மகா பூர்ணாஹுதி, சுவாமிக்கு கலச தீர்த்த ப்ரோக் ஷணம், நிவேதனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.அதன்பின், மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. மாலையில், மல்லிகை, முல்லை, செண்பகம், அரளி, செந்தாமரை, வெண்தாமரை, செவ்வந்தி, சம்பங்கி, வில்வம், துளசி, ரோஜா, மரிக்கொழுந்து, பவளமல்லி, மனோரஞ்சிதம், விருக் ஷி, மகிழம் உள்ளிட்ட பூக்களை கொண்டு, சுயம்பு லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு புஷ்பயாகம் நடந்தது.* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், நரசிம்ம ஜெயந்தியையொட்டி, பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, ஒன்பது வகையான அபிேஷகம் நடந்தது. துளசி, அரளி, சம்பங்கி உள்ளிட்ட, ஒன்பது வகையான பூக்களால் அலங்கார பூஜை நடைபெற்றது. பெருமாளுக்கு, ஒன்பது வகையான கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.