செவிலியர் மரணத்துக்கு நீதி வேண்டும்:ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
Added : மே 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்:'செவிலியர் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும்' என்று, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த முருகலட்சுமி, அதே மருத்துவமனையில் தலைவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள், ஊழியர்கள் கவனக்குறைவான சிகிச்சை காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.மரணத்துக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், அவரது குடும்பத்தினருக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தி, செவிலியரின் குடும்பத்தினரோடு, ஹிந்து முன்னணியினர், தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.முருகலட்சுமி மரணத்துக்கு நிவாரணம் வழங்காமல், அரசு வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது.மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை மதிக்காதது மட்டுமல்லாமல், இறந்துபோனது ஒரு அரசு ஊழியர் என்ற எண்ணம் கூட இல்லாமல் அரசு மவுனம் சாதிப்பது கண்டனத்துக்குரியது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X