பேரையூர்--டி.கல்லுப்பட்டிவேளாண் உதவி இயக்குனர் விமலா கூறியதாவது:கோடை உழவு செய்வதால் பெரிய மண் கட்டிகள் வெப்பம் மற்றும் மழையினால் நொறுங்குகிறது. மண்கட்டிகளில் மறைந்திருக்கும் பூச்சிகள், முட்டைகள், இளம் புழுக்கள் அழிகின்றன. ஆழமாக உழவு செய்வதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து நீர் பிடிப்புத் தன்மை மேம்படுகிறது. மக்காச் சோளத்தில் படைப் புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் அவசியம். கோடை உழவால் அதிக பயன்கள் உள்ளதால் விவசாயிகள் தவறாமல் அதனை கடைபிடிக்க வேண்டும், என்றார்.